Sunday, April 13, 2008

துபாய் இந்திய தூதரக அதிகாரியுடன் மௌலவி பஷீர் சேட் ஆலிம்

துபாய் இந்திய தூதரக அதிகாரியுடன் மௌலவி பஷீர் சேட் ஆலிம்




துபாயில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஐக்கிய அரபு அமீரக அரசினால் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தின் போது துபாய் இந்திய துணைத்தூதரகத்துடன் இணைந்து பணியாற்றிய அமைப்புகள் மற்றும் சேவையாளர்களைக் கௌரவப் படுத்தும் முகமாக பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்திய கன்சல் ஜெனரல் திருமிகு. வேணு ராஜாமணி கலந்து கொண்டு சான்றிதழை வழங்கினார். ஈமான் அமைப்பின் சார்பில் கல்வித்துறை செயலாளர் ஏ. முஹம்மது தாஹா மற்றும் ஊடகத்துறை பொறுப்பாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் ( முதுவை ஹிதாயத் ) கலந்து கொண்டு சான்றிதழைப் பெற்றனர்.

இந்நிகழ்வின் போது தாயகத்திலிருந்து வருகை புரிந்த முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் மன்பயீ கலந்து கொண்டார்.

மௌலவி பஷீர் சேட் ஆலிம், இந்திய துணைத்தூதரக அதிகாரி கன்சல் ( லேபர் & வெல்பேர் ) பி.எஸ். முபாரக், இந்திய சமூக நல கமிட்டி ஒருங்கிணைப்பாளர் கே. குமார், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.







No comments: