Thursday, August 12, 2010

Surah Al-Fatiha recitation

Surah Al-Fatiha [Emotional]

http://www.youtube.com/watch?v=u5G7kBV-yuE&feature=player_embedded#!


Emotional AL-FATIHA Recitation

http://www.youtube.com/watch?v=iPxLr3hDwGc&feature=related


One of the best AL-FATIHA Recitations

http://www.youtube.com/watch?v=JqbPcAp_k-8&feature=related




.

Monday, August 9, 2010

தீமைகளின் கிளையுதிர் காலம்

அஸ்ஸலாமு அலைக்கும்,

அல் ஹஸனாத்தில் வெளிவந்த கவிதையிலிருந்து சில பகுதிகள்.

தீமைகளின் கிளையுதிர் காலம்

அதோ...நோன்பு வருகிறது என் கல்பு நோக்கி கலிமா வருகிறது
மண்ணிலோ மண்ணுக்கு அடியிலோ அடுத்த ஆண்டிற்கான பயிற்சி பாசறை‍ வருகிறது.
ஓ...ரமலான் நீ எங்கள் இரத்தத்தை இனிப்பாக்க வருகிறாய் எங்கள் ஆன்மாவின் அழுக்கெடுக்க வருகிறாய்...
வா...அருகில் வா,
இனி எங்கள் வீட்டுத் தீமைகள் நெருப்பின் வாடை நுகரும்..
இனி என் தொழுகையின் அறுந்து போன ஆத்மிக நரம்புகள் உயிர் கொள்ளும்..

நடு இரவில் வியர்வையோடு விழிக்கிறேன் ஓ..ரமலான் வருகிறது. என் இதயத்தையும் வீட்டுக் கதவையும் நட்சத்திரங்களையும் அலங்கரிக்கின்றேன்.
நாளைய ஸஹருக்கு தயாராகின்றேன். தக்வா குத்பா ஓதுகின்றது, தாகமும் பசியும் யாருக்கு வேண்டும்?
நெற்றிகள் ஸூஜூதில்‍‍‍_கிடக்குமே கால்கள் கண்ணீரில் தேர் விடுமே,கொஞ்சக்கூடிய பிஞ்சுக் கால்களும் தராவீஹில் வீங்குமே
இடக்கை அறியாமல் ‍_ சிலரின் வலக்கையில் இதயங்கள் முளைக்குமே_அவை நோன்பு கால உயிரோவியங்கள்
நோன்பு ஒன்றும் காலையில் தூங்கி மாலையில் எழுந்து ஈத்தம் பழம் கடிக்கும் சம்பிரதாயமல்ல.
நோன்பு – மரம், இந்த மரம் மனிதனுக்கு தண்ணீர் ஊற்றும்
நோன்பு - குழந்தை இந்தக் குழந்தை தாய்க்கும் பாலூட்டும்
நோன்பு -சுவனத்து வாகனம் இது மனிதனின் இதயத்திற்கும் பெட்ரோல் ஊற்றும்
திரும்பிப் பாருங்கள் வரலாற்றுப் பார்வையில் நோன்பு சாதனை
இஸ்லாத்தின் ஜீவ மரண போராட்டம் ‍_ பத்ர் நோன்பு 17ல் தான் முன்னூற்றுப் பதினேழு முஹம்மத்கள், ஆயிரம் அபூஜஹ்ல்களின் கதை முடிந்தது.
ரமலான் 10ல் தான் ஏழை வயிற்றுக்குள் ஸகாத்துல் ஃபித்ராவின் சரித்திரம் புகுந்தது.
நோன்பு 9‍ல் தான் அஹ்ஸாப் யுத்தத்தின் அடி மண்ணிலே வீர மறவர்களின் வியர்வை விழுந்தது.
ரமலான் 21 ல் தான் தபூக் யுத்தத்தின் தடயங்களில் உரோமர்களின் உரோமங்களும் விழுந்தது.
ரமலான் 8 ல் தான் ஃபத்ஹ் மக்கா‍_ மக்கா வெற்றியில் மானுட இருள் மண்டியிட்டு ஓய்ந்தது.
தாரிக் பின் ஸியாத் கடலின் கரையடைந்து வந்த கப்பலை கொளுத்தி வெற்றி அல்லது வீர மரணம் என்று களம் புகுந்தபோது..ஸ்பெயினை இஸ்லாம் தழுவிக் கழுவிய போது ரமலான் 19!
ஸலாஹீத்தீன் அய்யூபி சிலுவை யுத்தத்தில் திருச்சபையை சிலுவையில் அறைந்து விட்டு வியர்வை துடைத்த போது நோன்பு 29!
ஐன் ஜாலூத்தில் தாத்தாரியர்கள் வியர்த்தோடிய போது நோன்பிற்கு வயது 7!
என் இனிய நண்பனே! தயாராகு இது இலையுதிர் காலமல்ல! தீமையின் கிளையுதிர் காலம். இந்த ரமலானை நாம் கைநீட்டி வரவேற்போம்.
"மரிக்கார்" அல் ஹஸனாத் ஆகஸ்ட் 2009, ரமலான் 1430

Tuesday, August 3, 2010

அல்குர்ஆனின் மாதம்

அல்குர்ஆனின் மாதம்


முஸ்லிம்களுக்கு அதிகம் நன்மைகளை ஈட்டிக்கொடுக்கும்
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி தான் இந்த ரமழான்.

இது நோன்பின் மாதமாகும்,

இது அல்குர்ஆனின் மாதமாகும்,

இது பொறுமையின் மாதமாகும்,

இது ஏழைகளுக்கு வாரி வழங்கும் மாதமாகும்,

இது இரவு வணக்கத்தின் மாதமாகும்,

இது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவை உடைய லைலதுல் கத்ர் இரவின் மாதமாகும்.

இப்படி பல பாக்கியங்களை உள்ளடக்கிய ரமழான் மாதமென்பது அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுவது போன்று: 'எண்ண முடியுமான சில நாட்களாகும்' (2: 184). எனவே குறிப்பிட் இந்த நாட்களில் ஒவ்வொரு முஸ்லிமும் நன்மைகளை அதிகம் செய்து அல்லாஹ்வின் பேரருளைப் பெற்ற நல்லடியார்களாக மாறவேண்டும். அதிகம் அதிகம் நன்மை செய்வதற்கு அழகான ஒரு சூழலை அல்லாஹ் அமைத்துத் தரும் போது கூட இதை ஒருவன் பயன்படுத்த தவரினால் அவன் வேரெந்த சந்தர்ப்பத்தை தான் பயன்படுத்துவான்!.

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமை
மார்க்கம் அனுமதித்தக் காரணங்கள் இன்றி நோன்பை விடுவது பெரும் குற்றமாகும்:

ரமழான் மாதத்தின் சிறப்பு

அல்குர்ஆன் அருளப்பட்ட மாதம், சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும்,
நரகத்திற்குரியவர்கள் விடுதலை,
பாவங்களுக்கு பரிகாரம், நன்மைகளை அதிகப் படுத்துவதற்கான அழைப்பு,
ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு,
நன்மையில் நிறைவான மாதம்...

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பு

முன் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு,நோன்பு பரிந்து பேசும்,
நோன்பை போன்ற ஓர் வணக்கம் இல்லை,
கணக்கின்றி கூலி வழங்கப்படும்,நோன்பின் கூலி சுவர்க்கம்,நரகத்தை விட்டு பாதுகாப்பு,
மனோ இச்சைகளை விட்டுத் தடுக்கும்,
நோன்பாளிக்கு ஈருலகிலும் மகிழ்ச்சி,கஸ்தூரியை விட சிறந்த வாடை,
நோன்பு எனக்குரியது என்ற அல்லாஹ்வின் வாக்கு...

நோன்பாளி செய்யவேண்டியவைகள்

தொழுகையை உரிய நேரத்தில் ஜமாஅத்துடன் நிரைவேற்றல்,
அல்குர்ஆனை ஓதுதல், அதை விளங்குதல், அதன்படி செயல்படுதல்
ஸுன்னத்தான (உபரியான) வணக்கங்களில் அதிகம் ஈடுபடுதல்
தான தர்மம் செய்தல் ,,அதிகம் பிரார்த்தனைகளில் ஈடுபடுதல்