Wednesday, April 30, 2008

துபாய் அஸ்கான் தொழிலாளர் முகாமில்



துபாய் சோனாப்பூர் அஸ்கான் தொழிலாளர் முகாமில் 'சிராஜுல் உம்மத்' மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பயீ 25.04.2008 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான் உரை நிகழ்த்தினார். அப்பொழுது ஈமானின் படித்தரங்கள் குறித்து விவரித்தார்.

Tuesday, April 29, 2008

துபாய் ஈமான் அமைப்பு நடத்திய ஆரோக்கிய அறிவியல் நிகழ்ச்சியில்...........





துபாய் ஈமான் அமைப்பு நடத்திய ஆரோக்கிய அறிவியல் நிகழ்ச்சியில்...........

நாள் : 25 ஏப்ரல் 2008
வெள்ளிக்கிழமை

இடம் : அஸ்கான் டி பிளாக்

உரை நிகழ்த்தியோர் :

டாக்டர் பி. எம். சையது அஹமத்
டாக்டர் மாஹின் செய்யது இஸ்மாயில்
மௌலவி அல்ஹாஜ் எஸ். பஷீர் சேட் ஆலிம் மன்பயீ

வரவேற்புரை : ஏ. லியாக்கத் அலி - பொதுச்செயலாளர் - ஈமான்

நிகழ்ச்சி தொகுப்பு : யஹ்யா முஹ்யித்தீன் - விழாக்குழு செயலாளர்

பங்கேற்றோர் : மௌலவி சுலைமான் லெப்பை ஆலிம் மஹ்ளரி

நன்றியுரை : கீழக்கரை ஏ. ஹமீது யாசின்









Friday, April 25, 2008

ஹஜ்ரத் பஷீர் சேட் ஆலிம்........

நமதூர் பெரிய பள்ளிவாசல் மஹல்லாவில் தொடர்ந்து மூன்றாவது தலைமுறையாக நம் பள்ளிவாசலின் இமாமாக் இருந்து நம் அனைவருக்கும் தீன்நெறி சேவை செய்து வரும் கண்ணியத்திற்கும் மரியாதைக்குமுரிய ‘பெரிய ஹஜ்ரத்' அவர்களை நாம் அனைவரும் அறிவோம்.

ஒரு காலத்தில் பள்ளிக்கல்வியைக் கூர் ( 8 ம் வகுப்பு, 10ம் வகுப்பு ) நிறைவு படுத்தாத நிலையில் மத்ரஸாவிற்கு சென்று ஓதி ஆலிம்கள் உருவாகி வந்தனர். அந்த காலகட்டத்தில், அப்போதைய எஸ்.எஸ்.எல்.சி. 11வது வகுப்பு வரை படித்து கல்லூரிக்கு செல்வதற்கு பதில் அரபிக் கல்லூரிக்கு சென்று லால்பேட்டை மன்பவுல் அன்வாருல் உலூம் அரபிக்கல்லூரியில் மார்க்க கல்வி கற்று, சுயமாக தொழில் தேடிக் கொண்டிருந்த நேரம் !

நமதூர் பெரிய பள்ளியின் இமாமாக சிறப்பாக செயல்பட்டு தமது சிறந்த கல்வியறிவாலும், பேச்சாற்றலாலும் நமதூர் மக்களின் உள்ளங்களிலும், தமிழகம், பர்மா, மலேசியாவில் வசிக்கும் தமிழ் முஸ்லிம் மக்களின் உள்ளங்களிலும் நீங்கா இடம் பெற்ற ‘சேட் ஆலிம் ஹஜ்ரத்' என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்ட கண்ணியத்திற்குரிய மௌலானா ஷம்சுத்தீன் சேட் ஆலிம் நூரி ஹஜ்ரத் அவர்கள் 1976 ஆம் ஆண்டு இறைவனின் நாட்டப்படி தாருல் பனாவை விட்டு தாருல் பகா சென்றடைந்த காரணத்தால், தகப்பனார் விட்டுச்சென்ற தீன்நெறி சேவையை தமையனார் பொறுப்பேற்று ஊர் மக்களுக்கு நல்வழி காட்டும்படி கூறிய ஜமாஅத்தார்களின் அன்புக்கட்டளையை தட்டமுடியாமல் ஏற்று, இன்று வரை சுமார் 33 ஆண்டுகள் நமதூர் மஹல்லாவில் சிறப்பாக சேவையாற்றி வருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.

ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வின்றி அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும் அழகிய உயர் குணத்தின் மூலம், நம் வீட்டில் ஒருவராகவும் நம் இன்ப துன்பங்களில் நமக்கு ஆறுதலாகவும், அனைவருக்கும் ஆசானாகவும், தீன்நெறி வழிகாட்டும் ஒளிவிளக்காகவும் ஹஜ்ரத் அவர்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் சேவை மனப்பான்மையையும், திறமையையும் மதித்து தமிழக அரசு ‘தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினர்' பதவியை கொடுத்து கௌரவித்தது.1975 முதல் இரண்டாண்டுகள் அப்பதவியை அலங்கரித்து அரசுக்கு அரிய பல ஆலோசனைகளை வழங்கிச் சிறப்பித்துள்ளார்கள்.

1975 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிரிந்து ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகளுக்கு உதவி செய்து ஹஜ் கடமையை அனைவரும் பரிபூரணமாக செய்திட தமிழக அரசால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட இரண்டு வழிகாட்டிகளில் ஹஜ்ரத் அவர்களும் ஒருவராவார்கள். அச்சமயம் தானும் ஹஜ் செய்து மற்ற மக்களையும் திருப்தியுடன் ஹஜ் செய்ய வைத்த பெருமைக்கு சொந்தக்காரர் அவர்கள்.

இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா என்னும் ஆலிம்களின் சபையின் தலைவர், செயலாளர் என பல கட்டங்களில் பல வகையான பொறுப்புக்களை வகித்து சிறப்பாக செயலாற்றியுள்ளார்கள். மேலும் இராமநாதபுரம் மாவட்ட ஷரீஅத் கவுன்சில் என்னும் மார்க்க தீர்ப்பாயம் ஆரம்பித்தது முதல் இன்று வரை அதன் உறுப்பினர்கள் சிலரில் ஒருவராக ஹஜ்ரத் அவர்களும் பொறுப்பேற்று, நமது சமுதாய மக்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஜமாஅத்தில் ஏற்படும் பல சிக்கலான பிரச்சனைகளுக்கு ஷரீஅத் அடிப்படையில் தீர்ப்புக்கூறி குடும்பத்திலும் சமுதாயத்திலும் ஒற்றுமையை நிலைநாட்டி வருகின்றார்கள்.

கல்வி கற்க வசதியில்லாத ஏழை எளிய மாணவர்கள் இவர்களைத் தேடி வரும்போது நமது சமுதாய பிரமுகர்களிடம் உதவி பெற்றுக் கொடுத்து பல மாணவர்களின் வாழ்வில் கல்விக் கண் திறந்துள்ளார்கள்.

அதே போன்று ஏழைக்குமர்களின் பெற்றோர்களும் தங்களின் குமர்காரியம் நிறைவேற உதவிதேடி வரும்போதும் தன்னால் முடிந்தவரை நம் சமுதாயப் பிரமுகர்களிடம் உதவியைப் பெற்றுக் கொடுத்து ஏழைக்குமர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளார்கள்.

நமதூரில் கடந்த 15 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வரும் நைனா முஹம்மது காதரம்மாள் டிரஸ்டின் மார்க்க ஆலோசகராகவும், மேற்படி டிரஸ்டின் கீழ் செயல்பட்டு வரும் ரஹ்மானியா எத்தீம்கானாவின் முதல்வராகவும் இன்று வரை சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றார்கள்.

அன்பாலும், பாசத்தாலும் அனைவரிடமும் பழகும் உன்னத உயர் பண்புகளாலும் ‘தனக்கு நிகர் தானே' என்னும் அளவுக்கு நம் உள்ளத்தை கொள்ளை கொண்ட கண்ணியமிகு ஹஜ்ரத் அவர்களின் துபாய் வருகை நம் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியே ! அல்ஹமதுலில்லாஹ் !!

அவர்களை துபாய் வாழ் முதுகுளத்தூர் முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் சார்பாக வரவேற்பதிலும், கௌரவிப்பதிலும் நாங்கள் பெருமை கொள்கின்றோம். எல்லாம் வல்ல இறைவன ஹஜ்ரத் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், நீடித்த சுகத்தையும் கொடுத்து நம் அனைவருக்கும் கண்குளிர்ச்சியாக ஆக்கிவைக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி துஆச் செய்கின்றோம்.


ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்
ஐக்கிய அரபு அமீரகம்
சார்பில்

மௌலவி ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி ஆலிம்
மார்க்க ஆலோசாகர்

Thursday, April 24, 2008

துபாயில் இன்று மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி

துபாயில் இன்று மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி


http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0425-medical-consultation-meet-at-dubai.html


துபாயில் இன்று மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி


துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் (ஈமான்) அமைப்பின் சார்பில் இன்று (ஏப்ரல் 25) மாலை மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

அஸ்கான் டி பிளாக்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்காயல் மருத்துவர் P.M. செய்யது அஹ்மது MBBS, DLO, FRCS (ENT) உரையாற்றுகிறார்.

இதைத் தொடர்ந்து, காது, மூக்கு, தொண்டை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

மேலும் 'சிராஜுல் உம்மத்' முதுவை பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் ஆகியோரும் 'இஸ்லாத்தில் மருத்துவம்' எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்த உள்ளனர்.

விபரங்களுக்கு:

ஹமீது யாசீன் - 050 2533712

யஹ்யா முஹிய்யத்தீன் - 050 5853888



படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களது ஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0425-medical-consultation-meet-at-dubai.html


http://www.kayalpatnam.com/shownews.asp?id=1742

துபாயில் சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

















துபாயில் சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

துபாய் தேரா ஸ்டார் மெட்ரோ ஹோட்டலில் சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி 24 ஏப்ரல் 2008 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

முன்னாள் மாணவரின் இறைவசனத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. துணை முதல்வர் ஹுமாயுன் கபீர் வரவேற்புரை நிகழ்த்தினார். வாழ்த்துரை வழங்கிய 'சிராஜுல் உம்மத்' மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் அவர்கள் தனது உரையில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே கல்வித்தந்தை அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களது சீரிய சிந்தனையில் உதித்த பிறைப்பள்ளி இன்று தரமான கல்வியினை வழங்கி வருவது குறித்து பெருமிதம் கொண்டார். மார்க்கக் கல்வி மற்றும் உலகக் கல்வி உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து வரும் சீதக்காதி டிரஸ்ட்டுக்கு பாராட்டு தெரிவித்தார். இத்தகைய நல்வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டார்.

பள்ளி முதல்வர் முனைவர் தாவூத் ஷா பள்ளியின் சிறப்பியல்புகளை எடுத்தியம்பினார். சர்வதேசப் பள்ளிக்கான பிரிட்டிஷ் விருது பெற்றதையும் விவரித்தார். மாணவர்கள் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளதையும் தெரிவித்தார். விரைவில் சர்வதேசப் பள்ளி ஒன்று துவங்கப்பட இருப்பதாகவும், கூடுவாஞ்சேரியில் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். ஐக்கிய அரபு அமீரகம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அதிக அளவில் இருக்கும் ஒரு நாடு. முன்னாள் மாணவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிதும் ஒத்துழைப்பு நல்கி வருவது பெரும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

தொடர்ந்து துணை முதல்வர் ஹுமாயுன் கபீர் பள்ளி குறித்த விளக்கப்படங்களையும், பள்ளியில் செய்யப்பட்டு வரும் மாற்றங்களயும், கல்விக்கட்டணம், விடுதி வசதி உள்ளிட்டவற்றை கணினி வழியே விவரித்தார். கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக்கல்லூரி முதல்வர் செய்யத் மஸ்ஊத் ஜமாலி அரபிக்கலூரியில் வழங்கப்படும் பாடத்திட்டங்கள் குறித்து விவரித்தார்.

கூட்டத்தில் ஈடிஏ அஸ்கான் நிறுவன இயக்குநர்கள் அல்ஹாஜ் ஆரிஃப் ரஹ்மான், தைக்கா நாஸர் சுஐப் ஆலிம், ஹமீது கான், எஸ்.எம். புகாரி, ஹபிபுல்லாஹ், ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, கல்விக்குழு செயலாளர்கள் ஏ. முஹம்மது தாஹா, யு. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் ஏ. ஹமீது யாசின், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் அஹ்மத் இம்தாதுல்லாஹ், இஸ்மத்துல்லஹ், சேக் முஹம்மது, ஹபிப் திவான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தட்ஸ்தமிழ்.காம்

English | हिन्दी | ಕನ್ನಡ | മലയാളം | தமிழ் | తెలుగు





Home Blogs Bookmarks Classifieds Cricket Entertainment Living News Shopping Travel Videos More

செய்திகள்


தமிழகம் இந்தியா உலகம் இலங்கை விளையாட்டு

முதல் பக்கம் » செய்திகள்

தடுப்பூசி போடப்பட்ட 4 குழந்தைகள் பலி - 15 பேருக்கு பாதிப்பு
சென்னை அருகே இரு கிராமங்களில் நடந்த அரசினர் தட்டம்மை தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடப்பட்ட 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ...
சோனியாவுக்கு ராஜீவ் கொலையாளிகள் நன்றிக் கடிதம்
கூத்தாண்டவர் கோவிலில் அரவாணிகள் தாலி அறுப்பு!
வெடி மருந்து குடோனில் தீ- 3 பேர் படுகாயம்

முதுகுளத்தூர் தலைமை இமாமுக்கு சிராஜுல் உம்மத் விருது

போலீஸ் பிடியிலிருந்து கஞ்சா கைதி தப்பியோட்டம்
முத்துக்கருப்பனை அவமதித்த கேரள அதிகாரி அதிரடி சஸ்பெண்ட்

முதுகுளத்தூர் தலைமை இமாமுக்கு சிராஜுல் உம்மத் விருது

www.thatstamil.com

இணைய இதழில் விருது பெற்ற செய்தி


http://thatstamil.oneindia.in/news/2008/04/24/world-muthukulathur-imam-honoured-in-dubai.html


முதுகுளத்தூர் தலைமை இமாமுக்கு சிராஜுல் உம்மத் விருது
வியாழக்கிழமை, ஏப்ரல் 24, 2008



துபாய்: துபாயில் நடந்த விழாவில், முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மெளலவி அல்ஹாஜ் எஸ்.அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பயீக்கு, சிராஜுல் உம்மத் என்ற விருது வழங்கப்பட்டது.

17ம் தேதி வியாழக்கிழமை மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இந்த பட்டம் வழங்கப்பட்டது.

விழாவிற்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவத் தலைவர் அல்ஹாஜ் ஹெச். ஹஸன் அஹ்மத் தலைமை தாங்கினார். இறைவசனங்களை மௌலவி என். சாதிக்குல் அமீன் மன்பயீ ஓதினார்.

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை கே. எம். ஹிதாயத்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். மௌலவி பஷீர் சேட் குறித்த அறிமுகவுரையினை மௌலவி ஹாஜி. ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினர் மௌலவி ஏ. முஹம்மது இஸ்மாயில் ஹஸனி சமுதாயப் பணியின் அவசியத்தை எடுத்தியம்பினார்.

தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன், ஆடிட்டர் ஹெச். அமீர் சுல்தான், அபுதாபி ஜமாஅத் பொறுப்பாளர் எஸ். அமீனுதீன், ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஏ. ஹமீது யாசின், ஒருங்கிணைப்பாளர் ஹெச். இப்னு சிக்கந்தர், எம். காஜா நஜுமுதீன், ஏ.ஜே.கல்வி அறக்கட்டளை இயக்குநர் டாக்டர் ஏ. நஸீருல் அமீன், பார்த்திபனூர் ஹமீது, மௌலவி அலி பாதுஷா மன்பயீ, இளங்கோவன், உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

துணைத்தலைவர் எஸ். சம்சுதீன் முதுவைக் கவிஞர் எழுதி இயற்றிய வாழ்த்துக் கவிதையினை வாசித்தார்.

'சிராஜுல் உம்மத்' விருதை முதுகுளத்தூரில் மூன்றாம் தலைமுறை இமாமாக மார்க்கப் பணியாற்றிவரும் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிமுக்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவத் தலைவர் ஹெச். ஹஸன் அஹ்மத் மற்றும் தலைவர் என்.எஸ்.ஏ.நிஜாமுதீன் ஆகியோர் வழங்கினர்.

மௌலவி பஷீர் சேட் ஆலிம் ஏற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் தனக்கு இத்தகைய சிறப்பைப் பெற காரணமான இறைவனுக்கு நன்றி தெரிவித்தார். அமீரக ஜமாஅத்தார்களின் சமுதாயப் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்தினார்.

பொருளாளர் ஏ. அஹ்மத் இம்தாதுல்லாஹ் நன்றி கூறினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

Tuesday, April 22, 2008

துபாயில் முதுகுளத்தூர் பெரிய பள்ளி தலைமை இமாமுக்கு சிராஜுல் உம்மத் விருது






துபாயில் முதுகுளத்தூர் பெரிய பள்ளி தலைமை இமாமுக்கு சிராஜுல் உம்மத் விருது

துபாயில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பயீக்கு 17.04.2008 வியாழன் மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ‘சிராஜுல் உம்மத்' எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

விழாவிற்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவத் தலைவர் அல்ஹாஜ் ஹெச். ஹஸன் அஹ்மத் தலைமை தாங்கினார். இறைவசனங்களை மௌலவி என். சாதிக்குல் அமீன் மன்பயீ ஓதினார்.


ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை கே. எம். ஹிதாயத்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். மௌலவி பஷீர் சேட் குறித்த அறிமுகவுரையினை மௌலவி ஹாஜி. ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி நிகழ்த்தினார்.


சிறப்பு விருந்தினர் மௌலவி ஏ. முஹம்மது இஸ்மாயில் ஹஸனி சமுதாயப் பணியின் அவசியத்தை எடுத்தியம்பினார். தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன், ஆடிட்டர் ஹெச். அமீர் சுல்தான், அபுதாபி ஜமாஅத் பொறுப்பாளர் எஸ். அமீனுதீன், ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஏ. ஹமீது யாசின், ஒருங்கிணைப்பாளர் ஹெச். இப்னு சிக்கந்தர், எம். காஜா நஜுமுதீன், ஏ.ஜே.கல்வி அறக்கட்டளை இயக்குநர் டாக்டர் ஏ. நஸீருல் அமீன், பார்த்திபனூர் ஹமீது, மௌலவி அலி பாதுஷா மன்பயீ, இளங்கோவன், உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

துணைத்தலைவர் எஸ். சம்சுதீன் முதுவைக் கவிஞர் எழுதி இயற்றிய வாழ்த்துக்கவிதையினை வாசித்தார்.


'சிராஜுல் உம்மத்' விருதை முதுகுளத்தூரில் மூன்றாம் தலைமுறை இமாமாக மார்க்கப் பணியாற்றிவரும் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிமுக்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவத் தலைவர் ஹெச். ஹஸன் அஹ்மத் மற்றும் தலைவர் என்.எஸ்.ஏ.நிஜாமுதீன் ஆகியோர் வழங்கினர்.

மௌலவி பஷீர் சேட் ஆலிம் ஏற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உணர்ச்சிப்பூர்வ உரையில் தனக்கு இத்தகைய சிறப்பைப் பெற காரணாமான வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவித்தார். அமீரக ஜமாஅத்தார்களின் சமுதாயப் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்தினார்.


பொருளாளர் ஏ. அஹ்மத் இம்தாதுல்லாஹ் நன்றி கூறினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.


செய்தி : மௌலவி ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி

Sunday, April 20, 2008

துபாய் ஜும்ஆ அல் மஜித் செண்டரில்....

துபாய் ஜும்ஆ அல் மஜித் செண்டரில் பழங்கால திருக்குர்ஆன் உள்ளிட்டவற்றை ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதனை சிராஜுல் உம்மத் மௌலவி அல்ஹாஜ் எஸ்.அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பஈ 20 ஏப்ரல் 2008 ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். உடன் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் சென்றார்.











துபாய் செண்ட்ரல் பள்ளியில் சிராஜுல் உம்மத்




துபாயில் செண்ட்ரல் பள்ளி அல் நஹ்தா பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்தியப் பிரமுகரால் நடத்தப்பட்டு வரும் இப்பள்ளியின் முதல்வராக தென்னிந்தியாவின் மான்செஸ்டராம் கோயம்புத்தூரைச் சேர்ந்த மிர்சா காலிப் முதல்வராக இருந்து வருகிறார். தலைமையாசிரியராக காயல்பட்டணத்தைச் சேர்ந்த நுஸ்கி இருந்து வருகிறார்.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் மிர்சா காலிப் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பள்ளியை சிராஜுல் உம்மத் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பயீ 20.04.2008 ஞாயிறன்று பார்வையிட்டார். அப்பொழுது பள்ளி முதல்வர் காலிப்பைச் சந்த்திது உரையாடினார்.

Saturday, April 19, 2008

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி


துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் (ஈமான்) அமைப்பு மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி ஒன்றினை எதிர்வரும் 25 ஏப்ரல் 2008 வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிஃப் தொழுகைக்குப்பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் நடத்த இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்
காயல் மருத்துவர் P.M. செய்யது அஹ்மது MBBS, DLO, FRCS (ENT)
அவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, காது, மூக்கு, தொண்டை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

மேலும் 'சிராஜுல் உம்மத்' முதுவை பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் அவர்களும் 'இஸ்லாத்தில் மருத்துவம்' எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்த உள்ளனர்.

எனவே, பொதுமக்கள் இவ்வரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்துமாறு மிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

விபரங்களுக்கு:

ஹமீது யாசீன் - 050 2533712
யஹ்யா முஹிய்யத்தீன் - 050 5853888

நிகழ்ச்சியின் நிறைவில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Wednesday, April 16, 2008

மௌலவி பஷீர் சேட் ஹஜ்ரத்திற்கு வரவேற்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் 17, 2008 வியாழக்கிழமை மாலை மஹ்ரிஃப்
தொழுகைக்குப்பின்னர் சுமார் 7.15 மணியளவில் அஸ்கான் டி பிளாக்கில் ( லூலூ
சென்டர் பின்புறம் ) தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள முதுகுளத்தூர்
முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி
ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நடைபெற
உள்ளது.


இந்நிகழ்ச்சியில் தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன், துணைத்தலைவர் எஸ்.
சம்சுதீன், பொதுச்செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ், பொருளாளர் ஏ.
அஹமத் இம்தாதுல்லாஹ் சேட், ஆடிட்டர் ஹெச். அமீர் சுல்தான்,
ஒருங்கிணைப்பாளர் ஹெச். இப்னு சிக்கந்தர், செயற்குழு உறுப்பினர்கள்
ஜாஹிர் ஹுசைன், எம். காஜா நஜுமுதீன், எஸ்.என். பக்ருதீன், ஹபிப்,
முஹம்மது, மௌலவி ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி, ரஹ்மத்துல்லாஹ்
உள்ளிட்ட பலர் வாழ்த்துரை நிகழ்த்த உள்ளனர்.

சிறப்பு விருந்தினராக மஸ்கட்டிலிருந்து கௌரவத் தலைவர் ஹெச். ஹஸன் அஹமது அவர்க்ள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.


நிகழ்ச்சிக்குப் பின்னர் உணவு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.


பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.


மேலதிக விபரம் பெற : 050 51 96 433

அமீரக தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில் பாராட்டு விழா



அமீரக தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில் பாராட்டு விழா


துபாயில் அமீரக தமிழ்க் கவிஞர் பேரவையின் சார்பில் வரும் ஏப்ரல் 5மே தேதி கவிஞர் அபிவை டி.எம்.எம்.தாஜுதீனுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.

மாலை 7.00 மணிக்கு கராமா சிவ் ஸ்டார் பவனில் நடக்கும் இந்த விழாவை சே.ரெ. பட்டணம் மணி, மீரா. அப்துல் கதீம், இ. இசாக், பாரத்,
குத்தாலம் அஷ்ரப் அலி, கவிமதி உள்ளிட்ட பேரவை ஆர்வலர்கள்
ஏற்பாடு செய்துள்ளனர்.

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பஈ, சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், பாடகர் ஏ.எஸ்.தாஜுதீன் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.


http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0331-dubai-tamil-poets-association-to-felicitate.html

ஹசன் டிப்பா அடக்கத்தலக்கதில்




ஓமன் பகுதியின் ஹசன் டிப்பாவில் ஷஹீதானவர்களை ஜியாரத் செய்தபோது

நாள் : 07 ஏப்ரல் 2008
திங்கட்கிழமை

பிதியா பள்ளி மிம்பர் அருகே




புஜைரா அருகேயுள்ள பிதியா பள்ளி அமீரகத்தில் 1400 வருட பழமை வாய்ந்த பள்ளி. அப்பள்ளியை கடந்த 07 ஏப்ரல் 2008 திங்கட்கிழமையன்று ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் அஜ்மான் செயற்குழு உறுப்பினர் ஏ. ஜஹாங்கீருடன், முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ்.அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பயீ அவர்கள் சென்று வந்தார்கள்.

1400 வருட பழமை வாய்ந்த பள்ளியானாலும் இன்றும் அதில் தொழுகை நடைபெற்று வருவது அதன் தனிச்சிறப்பாகும்.

கோர் பக்கான் கடற்கரை ஓரத்தில் ......



ஏப்ரல் 7, 2008

திங்கட்கிழமை

Sunday, April 13, 2008

துபாய் இந்திய தூதரக அதிகாரியுடன் மௌலவி பஷீர் சேட் ஆலிம்

துபாய் இந்திய தூதரக அதிகாரியுடன் மௌலவி பஷீர் சேட் ஆலிம்




துபாயில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஐக்கிய அரபு அமீரக அரசினால் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தின் போது துபாய் இந்திய துணைத்தூதரகத்துடன் இணைந்து பணியாற்றிய அமைப்புகள் மற்றும் சேவையாளர்களைக் கௌரவப் படுத்தும் முகமாக பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்திய கன்சல் ஜெனரல் திருமிகு. வேணு ராஜாமணி கலந்து கொண்டு சான்றிதழை வழங்கினார். ஈமான் அமைப்பின் சார்பில் கல்வித்துறை செயலாளர் ஏ. முஹம்மது தாஹா மற்றும் ஊடகத்துறை பொறுப்பாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் ( முதுவை ஹிதாயத் ) கலந்து கொண்டு சான்றிதழைப் பெற்றனர்.

இந்நிகழ்வின் போது தாயகத்திலிருந்து வருகை புரிந்த முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் மன்பயீ கலந்து கொண்டார்.

மௌலவி பஷீர் சேட் ஆலிம், இந்திய துணைத்தூதரக அதிகாரி கன்சல் ( லேபர் & வெல்பேர் ) பி.எஸ். முபாரக், இந்திய சமூக நல கமிட்டி ஒருங்கிணைப்பாளர் கே. குமார், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.







Thursday, April 10, 2008

அபுதாபி கேரளா சோஷியல் செண்டர் முன்புறம்

அபுதாபியில் ............

அபுதாபி அமீன் இல்லத்தில்

அபுதாபியில் ஐக்கிய முதுகுளத்தூர் ஜமாஅத் நிகழ்வில்

அபுதாபி - ஐக்கிய முதுகுளத்தூர் ஜமாஅத் நிகழ்வில்

அபுதாபி ஐக்கிய முதுகுளத்தூர் ஜமாஅத் வரவேற்பு நிகழ்வில்