Tuesday, January 13, 2009

தசையை வலுப்படுத்தும் பசலைக்கீரை!

தசையை வலுப்படுத்தும் பசலைக்கீரை!

உடலுக்கு வலிமையை தரும் சக்தி, அசைவ உணவுக்கு மட்டுமல்ல, பசலைக்கீரைக்கும் உண்டு என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

லண்டனில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், 'அசைவ உணவு மூலம் கிடைக்கும் சத்துக்கள் இந்த பசலைக்கீரையில் உண்டு என்பதும், இதை சாப்பிட்டால் உடல் வலிமை பெறுவதோடு, தசைகளும் வளர்ச்சி பெறும்' என்பதும் தெரியவந்துள்ளது.

பரிசோதனைக் கூடத்தில், மனித தசைகளின் மாதிரிகளில் இந்த உயிர்ச்சத்தை செலுத்தியபோது அவை 20 சதவீதம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்தன.

பரிசோதனை எலிகளுக்கு, பசலைக்கீரையை உணவாக கொடுத்து பரிசோதித்ததில், ஒரே மாதத்தில் எலிகள் அதிக பலம் பெற்றிருப்பது தெரியவந்தது.

இதுதவிர, பசலைக்கீரைகள் கண் நோய்கள், பல் சம்பந்தப்பட்ட நோய்கள், வைட்டமின் குறைவால் ஏற்படும் ஸ்கர்வி நோய் ஆகியவைற்றை குறைக்கிறது. மாரடைப்பை தடுக்கும் ஆற்றலும் பசலைக்கீரைக்கு உண்டு என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கேடுகளை அகற்ற 'அவரை' வைத்தியம்

நம் அன்றாட உணவில் எடுத்துக்கொள்ளப்படும் காய்கறியில் ஒன்றான அவரை, உடல் நலக்கேடுகளை அகற்றும் மருந்தாகவும் செயல்படுகிறது.

* முதிர்ந்த அவரையை சமைத்து சாப்பிட்டால், அஜீரணக் கோளாறுகள் நீங்கும். அத்துடன், நெஞ்செரிச்சலையும் இது போக்க வல்லது.

* அவரைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால், தலைவலி, வயிற்றுப் போக்கு போன்றவை நீங்க உறுதுணை புரியும்.

* நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்கும் திறனும் அவரைக்கு உண்டு.

* உடம்பில் கட்டிகள் நீண்ட நாட்களாக இருப்பின், அவரை இலைச்சாற்றில் பஞ்சை நனைத்து, கட்டியின் மீது ஒட்ட வேண்டும். அந்தப் பஞ்சில் அடிக்கடி அவரை இலைச்சாற்றை விட்டுவந்தால், கட்டிகள் மறைந்து போகும்.

* குழந்தைகளுக்கு வயிற்று வலி இருப்பின், அவரைப் பிஞ்சினை மைய அரைத்து, அதை விளக்கெண்ணெயில் குழைத்து தொப்புளைச் சுற்றி தடவ வேண்டும்.